/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/75_26.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி (நாளை)திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் படம் வெளியாகாது எனக் கூறப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாகாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கானகாரணத்தை அவர்கள் கூறவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)