ADVERTISEMENT

"கமல் எனக்கு கொடுத்த பரிசு இதுதான்" - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

04:04 PM Jun 17, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை பரிசாக அளித்தார். அத்துடன் விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதியிடம் நிருபர் ஒருவர், விக்ரம் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு கடிகாரம் கொடுத்தார்.அதே போன்று விக்ரம் படத்தில் சந்தனமாக நடித்த உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது கிடைத்த பெரும் பாக்கியம். இதை நான் வாழ்நாளில் கற்பனை கூட பண்ணிப் பார்த்திராத விஷயம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT