/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-12_5.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 'விக்ரம்' படக்குழு புது ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கமல் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'பஞ்சதந்திரம்'. அந்த படத்தில் ஐந்து பேரும் கான்ஃபரென்ஸ் காலில் பேசும் காட்சி பலராலும் ரசிக்கப்பட்டது. அதே காட்சியை தற்போது நடப்பது போல் வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் திரையரங்க முன்பதிவு வருகிற மே 29-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)