ADVERTISEMENT

திருமண நிகழ்ச்சியில் விஜய்... வைரலாகும் புகைப்படங்கள்...

10:41 AM Dec 07, 2019 | santhoshkumar

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT


இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிலுள்ள சிமோகா மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட் செய்யப்பட இருப்பதாக் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்நிலையில் சிவமோகாவிலுள்ள மத்திய சிறையில் தளபதி 64 ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1 முதல் ஜனவரி 18 வரை இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் ஷூட்டிங்கிற்காக, சிறையின் முகப்புக்கு புதிய வண்ணத்தை பூசியுள்ளது படப்பிடிப்புக் குழு. விரைவில் இந்த ஷூட்டிங்கில் விஜய்யும், விஜய் சேதுபதியும் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் நடிகர் விஜய் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபீ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT