ADVERTISEMENT

தளபதி 68 பரபரக்கும் பணிகள்; வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

07:02 PM Aug 18, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் பாடல், 'நா ரெடி...', மற்றும் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோக்கள் அவரவர்களது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.



இப்படி தொடர்ந்து 'தளபதி 68' பற்றி தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அழகிய தமிழ்மகன், கத்தி, புலி, பிகில் உள்ளிட்ட படங்களில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT