Skip to main content

விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

priyanka mohan to pair with vijay in thalapathy 68

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

படத்தின் முதல் பாடல், 'நா ரெடி...', மற்றும் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோக்கள் அவரவர்களது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. 

 

இதையடுத்து அண்மையில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்போது தனுஷுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'ஓஜி' படத்தில் நடிக்கிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய மரணம்; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
kallakurichi fake liquor incidentl Actor Vijay consoled

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்துள்ள விஜய், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

Next Story

“விஜய்யை தவிர மீதமுள்ள நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்?” - ஜெயக்குமார் விமர்சனம் 

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Former Minister Jayakumar condemns tamil actors

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு‌ அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.