/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/463_8.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். முதல் முறையாக விஜய்யை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் இப்படத்தை பற்றிய தகவல் தொடர்ந்து வரத்தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைத்துள்ளதாக பேசப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜோதிகாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் மூன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாகவுள்ளார் ஜோதிகா. முன்னதாக 'குஷி', 'திருமலை' உள்ளிட்ட படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா தற்போது இந்தியில் விகாஸ் பால் இயக்கத்தில் படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ராஜ்குமார் ராவ் நடிக்கும் 'ஸ்ரீ' படத்திலும் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)