ADVERTISEMENT

"மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ" - 'ஏகே 62' க்கு ரெடியான விக்னேஷ் சிவன் 

03:01 PM Mar 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 'ஏகே 62' படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்தின் "வேற மாறி" பாடலில் இடம்பெறும் "மேல இருக்கிறவன நம்ப நல்லா கத்துக்கோ" என்ற வரிகளைப் பகிர்ந்துள்ளார். ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் பதிவு மேற்கண்ட தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT