/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/119_10.jpg)
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் 24 ஆம் தேதிஉலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியுள்ளதால்அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், மற்றவர்களிடையே கலவையான விமர்சனங்களேகிடைத்து வருகின்றன. இருப்பின் படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் கட்சிகளும் பலரை கவர்ந்து வருகிறது.
இதனை தொடர்ந்து 'அஜித்தின் 61'படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச். வினோத் கூறியிருந்தார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனாஇருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் நடிக்க இருப்பதாக ஏற்கவேதகவல் வெளியானது.
இந்நிலையில் ஏகே 61 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கவின்நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)