Skip to main content

'ஏகே 62' பட அறிவிப்பு வெளியாகி 1 ஆண்டு நிறைவு; சோக பாட்டை ஸ்டோரியில் வைத்த விக்னேஷ் சிவன்

 

 ak62 vignesh shivan story goes viral

 

சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை எடுத்தார். பின்பு கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கரம் பிடித்தார். 

 

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் இயக்க கமிட்டானார். இதற்கான அறிவிப்பு இதே நாளில் (18.03.2023) கடந்த வருடம் இரவு 7 மணிக்கு வெளியானது. ஆனால் சில காரணங்களால் அஜித்தை இயக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். அஜித்தை இயக்குவதாக வெளியான அறிவிப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாய்ப்புகள் தவறவிடுவது பற்றி அர்த்தம் குறிக்கும் வரிகளை பகிர்ந்துள்ளார். 

 

அவர் இயக்கத்தில் வெளியான 'நானும் ரௌடி தான்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' சோக பாடலின் "கிடைச்சத இழக்குறதும்... இழந்தது கிடைக்கிறதும், அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி. கொடுத்தத எடுக்குறதும்... வேற ஒண்ணு கொடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி" வரிகளை வைத்துள்ளார். மேலும் ‘சில வரிகள் உண்மையாகவே நிறைய அர்த்தங்களை குறிக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்