ADVERTISEMENT

வெற்றிமாறன் திரைக்கதையில் சசிகுமார் -அதிகாரப்பூர்வ  அறிவிப்பு..  

01:02 PM Nov 04, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். படத்தின் மேக்கிங்கிற்காக மட்டுமின்றி கதை மற்றும் திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார். மேலும் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். மேலும் இவர், கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே உதயம் என்.எச்.4, கொடி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் வெற்றிமாறன்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசனோடு இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார் வெற்றிமாறன். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. வெற்றிமாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவர் இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT