ஜாக்பாட் படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா தற்போது நடிகர் கார்த்தியுடன், பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

jyothika

இதுபோக ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பொன்மகள் வந்தாள் என்ற மற்றொரு புதிய படத்திலும் அவர் நடித்து வரும் நிலையில் ஜோதிகா அடுத்ததாக கத்துகுட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.