Skip to main content

பிரபல இயக்குநரை இயக்கும் சசிகுமார்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

sasikumar to direct anurag kashyap

 

2008-ஆம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தில் ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசை பணிகளை மேற்கொண்டிருந்தார். மதுரையில் 80-களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கேங்ஸ்டர் படங்களின் லிஸ்டில் இருக்கிறது. 

 

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு தனது இரண்டாவது படமாக 'ஈசன்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிவெஞ்ச் ட்ராமா என்ற ஜானரில் அமைந்திருந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தையும் சசிகுமாரே தயாரிக்க ஜேம்ஸ் வசந்தன் இசையை கவனித்தார். 

 

இதனிடையே 2009ல் நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சசிகுமார், 'ஈசன்' படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. தொடர்ச்சியாக நடிகராக மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்பு பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. 

 

சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்தார் சசிகுமார். மேலும் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகுமார் இயக்கவுள்ள புது படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சசிகுமார் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாவதாகவும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் எடுக்க சசிகுமாரின் 'சுப்ரமணிபுரம்' படமும் ஒரு காரணம் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும் அப்படத்தின் டைட்டில் கார்டில் சசிகுமாருக்கு நன்றி தெரிவித்திருப்பார். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பின்பு சுந்தர்.சி நடிப்பில் உருவாகும் 'ஒன் டூ ஒன்' படத்தில் நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” - சசிகுமார்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
sasikumar about aadujeevitham movie and director blessy

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் இப்படத்தின் இயக்குநர் குறித்தும் ஆடு ஜீவிதம் படம் குறித்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பிளெஸ்சி சாரும் பின்னே நானும். சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் அவருடைய நட்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். 

sasikumar about aadujeevitham movie and director blessy

பெரும் பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம். பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கோட் லைப் நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.