ADVERTISEMENT

'சீயான் 60' படத்தில் இணைந்த சின்னத்திரை பிரபலம்!

04:47 PM Mar 13, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க, பாபி சிம்ஹா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த புதன்கிழமை தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீயான் 60 படத்தில் வாணி போஜன் நடிப்பது குறித்து நீண்ட நாட்களாகவே தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT