vani bhojan

Advertisment

‘யாக்கைத் திரி’, ‘முன்னறிவான்’ உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் பரத், தற்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் இயக்கவிருக்கும் இப்படத்தை, ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் பரத் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘காளிதாஸ்’ பட பாணியிலான திரில்லர் வகை படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில், பரத்திற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.