
சின்னத்திரை நடிகையாக இருந்த வாணி போஜன், கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 2டி நிறுவனம் தயாரித்த 'ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் - த்ருவ் விக்ரம் இருவரும் நடிக்கும் 'மகான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'உதவும் உள்ளங்கள்' என்ற தொண்டு நிறுவனம் ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு 'ஆனந்த தீபாவளி' என்ற நிகழ்வை நடத்தியது. இதில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினர். அதனையடுத்து இந்நிகழ்வில் பேசிய வாணி போஜன் இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு எனக் கூறியுள்ளார்.