ADVERTISEMENT

"விடுதலை நாள், ஆகஸ்ட் பதினைந்தா... செப்டம்பர் பதினைந்தா" - வைரமுத்து கேள்வி

12:15 PM Sep 15, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று பல அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் அண்ணாவை நினைவு கூறும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

இருமொழிக் கொள்கையால்
வடமொழிப் பிடியிலிருந்து
தாய்மொழிக்கு
விடுதலை தந்தாய்

மாநில
சுயாட்சியை வரைவுறுத்தி
ஆதிக்க விடுதலைக்கு
அடித்தளமிட்டாய்

உண்மையில் விடுதலை நாள்
ஆகஸ்ட் பதினைந்தா
செப்டம்பர் பதினைந்தா
அண்ணா!"

என குறிப்பிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT