அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதே போல் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.