ADVERTISEMENT

'வாடிவாசல்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

05:04 PM Mar 17, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 40' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க உள்ள படம் 'வாடிவாசல்'. வாடிவாசல் நாவலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

தற்போது சூரி நடித்து வரும் படத்தின் பணிகளில் பிசியாக உள்ள வெற்றிமாறன், அவ்வப்போது வாடிவாசல் படத்திற்கான முதற்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். வாடிவாசல் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் தோற்ற வடிவமைப்பிற்கான பிரத்யேக போட்டோஷூட் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா காளையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT