/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/57_16.jpg)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 'சூர்யா 40' எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் நாயகன் சூர்யா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியிடப்பட்டது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவ்விரு போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், படத்தின் த்தேர்ட் லுக் என்று மூன்றாவது போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான அப்டேட்களால் உற்சாகத்தில் உள்ள சூர்யா ரசிகர்கள், மூன்றாவது போஸ்டரையும் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)