ADVERTISEMENT

"தமிழே போதும் இந்தி வேண்டாம் என்று நினைத்தோம், ஆனால்..." - உதயநிதி ஸ்டாலின்

12:37 PM Aug 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹாலிவுட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ரீமேக்கான லால் சிங் சத்தா படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.



இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை கட்டடித்துவிட்டு அமீர் கானின் 'ரங்கீலா' படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன். மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயன்றாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் லால் சிங் சத்தா படத்தை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ்த் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, 'லால் சிங் சத்தா' படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்.'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT