'தக்ஸ்ஆஃப்ஹிந்தோஸ்தான்'படத்தைதொடர்ந்துஅமீர் கான்'லால்சிங்சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தைஅத்வைத்சந்தன் இயக்கியுள்ளார்.அமீர் கானுக்குஜோடியாக கரீனா கபூர் நடிக்க,மோனாசிங், நாகாசைதன்யாஉள்ளிட்டோர் படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டுஹாலிவுட்டில்டாம்ஹான்க்ஸ்நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட்கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலானஐக்யூஉள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்துபணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழகவெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின்ரெட்ஜெயன்ட்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.சமீபகாலமாக தமிழ்சினிமாவில் வெளியானஒரு சிலபடங்களைதவிர மற்ற அனைத்து படங்களையும்வெளியிட்டு வரும்ரெட்ஜெயன்ட்நிறுவனம் தற்போதுஅமீர் கானின்லால்சிங்சத்தா படத்தையும் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.