ADVERTISEMENT

ஐ.எம்.டி.பி இணையதளம் வெளியிட்ட டாப் 10 பிரபல இந்தியத் திரைப்படங்கள்

01:07 PM Dec 15, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.எம்.டி.பி உலகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இருப்பது படங்களுக்கு ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் ‘டாப் 10’ குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் முதல் இடத்தில் தனுஷ் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்தியத் திரைப்படங்களே அதிக இடங்களைப் பிடித்துள்ளன.

முதல் இடத்தை எஸ்.எஸ் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, 3வது இடத்தில் நடிகர் யஷ் நடித்த 'கே .ஜி.எஃப் 2', 4வது இடத்தில் கமலின் 'விக்ரம்', 5வது இடத்தில் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' ஆகிய படங்கள் உள்ளன.

6வது இடத்தில் மாதவனின் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு', 7வது இடத்தில் அதிவி சேஷ் நடித்த 'மேஜர்', 8வது இடத்தில் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்', 9வது இடத்தில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', 10வது இடத்தில் ரக்சித் ஷெட்டி நடித்த '777 சார்லி' ஆகிய படங்கள் உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT