ADVERTISEMENT

சர்ச்சை ஆடியோ குறித்து டாம் க்ரூஸ் விளக்கம்!

03:33 PM May 13, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

'மிஷன் இம்பாசிபிள் 7' படக்குழுவினரை நடிகர் டாம் க்ரூஸ் கடுமையாகத் திட்டிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அப்பதிவு குறித்து நடிகர் டாம் க்ரூஸ் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் டாம் க்ரூஸ், 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் நடிகராகவும் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பரவலின் வேகம் குறையைத் தொடங்கியதும் படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அனுமதியைத் தொடர்ந்து, லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் செட் அமைத்து, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு பல லட்சம் டாலர்களை டாம் க்ரூஸ் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படப்பிடிப்பு தளத்தில் சிலர் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை. இதனால் கோபமடைந்த டாம் க்ரூஸ் அவர்களைக் கடுமையாகத் திட்டினார். இது இணையத்தில் கசிந்ததும் டாம் க்ரூஸின் செயலுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

இதுகுறித்து பல மாதங்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள டாம் க்ரூஸ், "நான் கூறியது கூறியதுதான். அதற்காக நிறைய விலை கொடுத்திருந்தோம். ஒட்டுமொத்தக் குழுவையும் நான் திட்டவில்லை. மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, விதிமீறலில் ஈடுபட்ட ஒரு சிலரை மட்டுமே திட்டினேன். அப்படி இருந்ததால்தான் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அன்று என் மனதில் பல உணர்வுகள் ஓடிக்கொண்டிருந்தன. படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்பதே எங்கள் மொத்த குழுவுக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT