/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tom cruise _0.jpg)
ஸ்பேஸில் நடப்பது போன்ற கதையை யோசித்து அதை கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கி படம் எடுப்பது என்பது தற்போதையை கணினி உலகில் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் பலவிதமான ஸ்பேஸ் கதைகளைப் பார்த்து வருகின்றனர். ஆனால், நேரடியாக ஸ்பேஸில் இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை.
அந்த யுக்தியைக் கையாண்டு படமெடுக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸும், தொழிலாதிபர் எலன் மஸ்க்கும், நாசாவும் திட்டம் தீட்டியுள்ளது. ரிட்டர்ன் ஃப்ரம் ஆர்பிட் என்ற ரஷ்ய படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் விண்வெளியில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு யாரும் விண்வெளியில் முழு நீளப்படத்தை எடுக்கவில்லை.
நடிகர் டாம் க்ரூஸை வைத்து விண்வெளிக்குச் சென்று முழு நீல ஆக்ஷன் படத்தை உருவாக்க நாசாவும், நடிகர் டாம் க்ரூஸும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (21.09.20) அன்று ஸ்பேஸ் ஷட்டில் அல்மனாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு விண்கலத்தின் புகைப்படமும் அதில் பயணம் செய்யவுள்ள நபர்களின் பெயர்களை அடங்கிய பட்டிலும், அவர்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் இயக்குனர் டக் லிமான் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட ஹாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அதை தங்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினார். இதனால் இந்த தகவல் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)