ADVERTISEMENT

'இந்தியன் 2'.. ஷங்கருடன் இணைந்து மூன்று முன்னணி இயக்குநர்கள் 

05:38 PM Sep 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதனால் ஒரே நேரத்தில் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் மாறி மாறி நடைபெறுவதால் உதவிக்காக இயக்குநர் ஷங்கர் தன்னுடைய சிஷ்யர்களை 'இந்தியன் 2' படத்தில் இணைத்துள்ளாராம். அதன்படி ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் 'இந்தியன் 2' படம் முழுவதும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இயக்குநர் வசந்தபாலன் இந்தியன் படத்தின் முதல் பாகத்திலேயே உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT