Skip to main content

ஒரே களத்தில் 15வது முறை - தீபாவளியை குறி வைக்கும் ரஜினி - கமல்?

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

rajini jailer kamal indian 2 both team are planning to release his movies on diwali 2023

 

தமிழ் சினிமாவில் ஆளுமைகளாக திகழும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தற்போது 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' படங்களில் நடித்து வருகின்றனர். 

 

'ஜெயிலர்' படத்தை நட்சத்திரப் பட்டாளத்தோடு நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்க கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  

 

இந்த நிலையில், 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களுமே வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொங்கலை முன்னிட்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு ரஜினி, கமல்ஹாசன் படங்கள் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

ரஜினி மற்றும் கமல் படங்கள், கடைசியாக 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' ஒரே தேதியில் வெளியாகும் பட்சத்தில் 18 ஆண்டுகள் கழித்து 15வது முறையாக இருவரின் படங்களும் ஒரே தேதியில் வெளியாகும். 

 

இதற்கு முன்னதாக 14 முறை ஒரே தேதியில் இருவரின் படங்களும் ரிலீஸாகியுள்ளது. 1983 - ரஜினி(தங்கமகன்), கமல்(தூங்காதே தம்பி தூங்காதே), 1984 - ரஜினி(நல்லவனுக்கு நல்லவன்), கமல்(எனக்குள் ஒருவன்), 1985 - ரஜினி (நான் சிகப்பு மனிதன்), கமல்(காக்கி சட்டை), 1985 - ரஜினி(படிக்காதவன்), கமல்(ஜப்பானில் கல்யாணராமன்), 1986 - ரஜினி(மாவீரன்), கமல்(புன்னகை மன்னன்), 1987 - ரஜினி(மனிதன்), கமல்(நாயகன் ), 1987 - ரஜினி(வேலைக்காரன்), கமல்(காதல் பரிசு), 1989 - ரஜினி(மாப்பிளை), கமல்(வெற்றிவிழா), 1990 - ரஜினி(பணக்காரன்), கமல்(இந்திரன் சந்திரன்), 1991 - ரஜினி(தளபதி), கமல்(குணா), 1992 - ரஜினி(பாண்டியன்), கமல்(தேவர் மகன்), 1995 - ரஜினி(பாட்ஷா, கமல்(சதிலீலாவதி), 1995 - ரஜினி(முத்து), கமல்(குருதிப்புனல்), 2005 - ரஜினி(சந்திரமுகி), கமல்(மும்பை எக்ஸ்பிரஸ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்