ADVERTISEMENT

"இதுக்காக காத்திருப்பது ஒர்த்!" - ‘வலிமை’ அப்டேட் கொடுத்த தமன்!

11:59 AM Feb 17, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்பவது வழக்கம். ஆனால், தயாரிப்பு தரப்பு படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.

இது, அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அஜித்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'வலிமை' அப்டேட் குறித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் இது எதிரொலித்தது. அங்கேயும் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் குறித்து பதாகைகள் ஏந்துவது, வீரர்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்பது போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இது இன்னமும் வைரலாகவே நடிகர் அஜித் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அஜித் ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு, ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார்.

போனி கபூரின் இப்பதிவைக் கண்டு உற்சாகமான அஜித் ரசிகர்கள், இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்ற நிலையில், தற்போது இசையமைப்பாளர் தமன் 'வலிமை' அறிமுக பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "என் அன்பு அண்ணன் யுவன்ஷங்கர் ராஜாவிடம் இருந்து கிழித்தெடுக்கும் ‘வலிமை’ படத்தின் பாடலைக் கேட்டேன். நிச்சயமாக இது அஜித் ரசிகர்கள் காத்திருக்க தகுதியுள்ள ஒரு பாடல்தான்" என பதிவிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT