valimai

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

Advertisment

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தையொட்டி உலகம் முழுவதும் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய காட்சிகளின் சிறு தொகுப்பை நாளை (23.09.2021) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

நீண்ட நாட்களாக ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் அப்டேட் கேட்டுவந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.