ADVERTISEMENT

களத்தில் இறங்கிய லோக்கி அண்ட் டீம்; வைரலாகும் விஜய் புகைப்படம் 

02:52 PM Aug 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வரும் நிலையில் விஜய் தளபதி 67 படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் எஞ்சியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்து தளபதி 67 படத்தில் விஜய் கவனம் செலுத்தவுள்ளாராம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT