thalapathy 67 update priya anand and sandy master on board

Advertisment

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில் தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக அறிவித்த படக்குழு, அடுத்ததாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரபல ஹீரோயினாக வலம் வரும் இவர் இப்படத்தில்கதாநாயகி கதாபாத்திரம் அல்லாமல் முக்கிய கதாபாத்திரம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் நடன இயக்குநர்சாண்டி மாஸ்டர் இப்படத்தில்நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

Advertisment

இப்படத்தில் திரிஷா கமிட்டாகியுள்ளதாகசொல்லப்படும் நிலையில், அதனைக் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது தனி விமானம் மூலம் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது.