ADVERTISEMENT

ரம்ஜானை முன்னிட்டு இன்று வெளியாகிறதா ‘தளபதி 63’ அப்டேட்?

11:05 AM Jun 05, 2019 | santhoshkumar

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள், ஆர் ஆர் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று இரவு பதிவு செய்த ஒரு ட்விட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தளபதி 63 அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்கிற விபரத்தை அறிவிக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டரில் கமெண்ட்கள் எல்லாம் எப்போது தளபதி 63 அப்டேட் விடுவிங்கள் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய தங்கையும், அக்கா எனக்கு அப்டேட் வேண்டும் என்று கேட்டிருந்தார். பலரும் இப்படி அவரிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT