இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர். அமீன். கடந்த 18ஆம் தேதி சோனி நிறுவனம் அமீன் சிறு வயதில் சங்கீதம் கற்றுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் தந்தையிடம் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பாடிக் காண்பிக்கிறார் அமீன்.

Advertisment

ar ameen

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம், ‘காத்திருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் பணி புரிந்துவருகிறார். அப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம்தான் வாங்கியுள்ளது. எனவே தளபதி 63ல் அமீன் பாடியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ‘மவுல வஸ்ஸல்லி வ சல்லிம்’ என்ற பாடலைப் பாடியுள்ளார் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும், 7அப் மெட்ராஸ் கிக் சீசன் 2வில் இந்த முறை இவர் இசையமைத்து ஒரு பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.