ADVERTISEMENT

தல 60 பூஜை போட்டாச்சா? வைரலாகும் போட்டோ ஷூட்... ரசிகர்கள் அதிர்ச்சி...

10:24 AM Sep 10, 2019 | santhoshkumar

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்னும் ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார். இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் வெளியான இரு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனையடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பூஜையுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் 60வது படமான இந்த படத்தில் அவரை எதிர்த்து நடிக்கும் வில்லனாக பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது ஒரு வதந்தி என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து சமூக வலைதளத்தில் தல 60 படத்தின் போட்டோ ஷூட் என்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்கு பூஜை போட்டாச்சா? சொல்லவே இல்ல என்று ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அது தல 60 போட்டோ ஷூட்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT