அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்திருக்கும் இது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

Advertisment

ajith kumar

இந்த படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 60வது படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் உருவாக இருப்பதாகவும், அஜித் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="277bcf9f-3ff1-4d8c-8303-31bb63eafd58" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_6.jpg" />

Advertisment

இந்நிலையில் இந்த வருடம் பாலிவுட்டில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் தல அஜித் நடிக்க விரும்புவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இந்தியாவில் நடக்கும் சாதி கொடுமைகளை தோலுறிக்கும் படமாக வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தை அஜித் போன்ற ஒரு நடிகர் நடித்தால் அதில் பேசப்படும் விஷயம் கண்டிப்பாக பெரும்பான்மை மக்களை சென்றடையும்.