ADVERTISEMENT

ஸ்ரீதேவி மரணம் - அனில் கபூர் வீட்டில் தமிழ் நட்சத்திரங்கள்!

12:52 PM Feb 27, 2018 | vasanthbalakrishnan

ஸ்ரீதேவியின் மறைவைத் தொடர்ந்து அரசியல், சினிமா பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடத்திருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் அவரது உடல் இந்திய நேரப்படி இன்று (27-2-18) மாலை 5.30க்கு மும்பை வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எம்பாமிங் எனப்படும் உடல் பதப்படுத்துதல், இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளால் அவர் உடல் துபாயிலிருந்து இங்கே வர தாமதமாகிறது என கூறப்பட்ட நிலையில் இந்திய மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் அவரது வீட்டிலும் அவரது கணவர் போனி கபூரின் தம்பியான அனில் கபூர் வீட்டிலும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மேலும் தமிழ் திரையுலகில் நாசர், ஜெனிலியா, நக்மா, ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே மும்பையில் இருக்கிறார். ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடைந்ததும் இறுதி சடங்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்காக நேற்று மும்பை சென்றுள்ளார். இப்படி தொடர்ந்து பல பிரபலங்கள் ஸ்ரீதேவி மறைவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT