அரசியல் ஒன்றும் ரோஜாப்படுக்கை அல்ல என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா அறிவுரை வழங்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sathrugan-si_0.jpg)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், பா.ஜ.க.மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து நேற்று மும்பையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், ‘ரஜினியும், கமலும் எனது நண்பர்கள்தான். அவர்கள் அரசியலில் குதிப்பதற்கு முன்னர் அதற்கான திரைக்கதைகளை வகுத்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதேசமயம், தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அவர்கள் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால் வேண்டாமென்று அவர்களைத் தடுத்திருப்பேன். அரசியலில் இருக்கும் பல கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியிருப்பேன். அரசியல் என்பது அவர்கள் நினைப்பதைப் போல் ரோஜாப் படுக்கை அல்ல. தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. அவரைத் தாண்டி இந்த நடிகர்களால் மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)