ADVERTISEMENT

சர்வதேச அளவில் 'ஜெய் பீம்' படத்திற்கு அங்கீகாரம்!

10:35 AM Dec 02, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து பாமக செய்தி தொடர்பாளர் கே. பாலு 'ஜெய் பீம்' படத்திற்கு எந்தவிதமான விருதும் தரக் கூடாது என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் ‘ஜெய் பீம்’ படம் இடம்பிடித்துள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் தமிழில் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' படமும், ‘சர்தார் உத்தம்’, ‘பாத்தர் ஹூரைன்’ ஆகிய இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT