/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/joshika.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தில்ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன், ஜோஷிகா மாயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜோஷிகா மாயா தனியார் பள்ளி ஒன்றில் படித்துவருகிறார். இவர் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்ததற்காக பள்ளியில் இருந்து டி.சி. வாங்கச் சொன்னதாகவும், இந்தப் பிரச்சனையை நடிகர் சூர்யா தலையிட்டு தீர்வு கண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஜோஷிகா மாயாவின் தந்தை இதை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "‘ஜெய் பீம்’ படத்தில் நடித்ததற்காக பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து டி.சி. வாங்கச் சொன்னதாகபரவும் செய்தி உண்மை அல்ல. பள்ளி நிர்வாகம் என் மகளுக்கு முழு ஆதரவு தருவதாக கூறியுள்ளது. நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எங்களிடம் இதுகுறித்து கேட்டனர். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என அவர்களுக்கும்நாங்கள்விளக்கம் அளித்துவிட்டோம். தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)