ADVERTISEMENT

"இது வெறும் ஆரம்பம்தான்" -சுரேஷ் ரெய்னாவை வாழ்த்திய சூர்யா..

11:39 AM Nov 28, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் சமீபத்தில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மிஸ்டர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் ரெய்னா, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக, அத்தொடரிலிருந்து விலகிய ரெய்னா, ஜம்மு காஷ்மீரில் உள்ள, பின்தங்கிய சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க, கிரிக்கெட் அகாடமி தொடங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

ADVERTISEMENT

சுரேஷ் ரெய்னாவும், நடிகர் சூர்யாவும் நண்பர்களாவார்கள். என்.ஜி.கே. படத்தின் விளம்பரத்திற்காக, சூர்யா சமூக வலைதளத்தில் லைவ் வந்தபோது, அதில் சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு, உங்களுக்கு பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் யார்? என கேட்டதும், அதற்கு சூர்யா தோனி என பதிலளித்தோடு, லைவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சுரேஷ் ரெய்னா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா, ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட்டர்களின் திறமையை வெளிக்கொணர ரெய்னா எடுக்கும் முயற்சியை பாராட்டியதோடு, இது வெறும் ஆரம்பம்தான் என கூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஜம்மு & காஷ்மீரின் வளரும் கிரிக்கெட்டர்களோடு நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைய வாழ்த்துகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT