Skip to main content

“வலிமையா இருக்கு... வாழ்த்துகள் அண்ணாத்த...” ஹர்பஜனுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ரெய்னா!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

friendship movie

 

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

 

தற்போது இயல்புநிலை திரும்பி, திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து, 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்பட வெளியீட்டிற்காக ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தமிழில் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "பஜ்ஜி பா... என் அண்ணாத்த! 'ஃப்ரெண்ட்ஷிப்' ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. 'ஃப்ரெண்ட்ஷிப்' டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ரெய்னாவின் தமிழ் ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

"ஒன்றாக சேர்ந்து வெற்றி பெறுவோம்" - விமர்சனத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

harbhajan singh advice for indian cricket fans tweets 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்த விமர்சன பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில், “தோனி மட்டும்  தனியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பைகளை வென்று கொடுத்தாரா. அணியில் இருந்த மற்ற 10 வீரர்கள் விளையாடவில்லையா. ஆஸ்திரேலியா போன்ற மற்ற  நாடுகள் உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியினர் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றால் கேப்டன் வென்றார் என்று கூறப்படுகிறது. ஒன்றாக  சேர்ந்து வெற்றி பெறுவோம்; ஒன்றாக சேர்ந்து தோல்வி அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.