ADVERTISEMENT

“மீண்டும் கெத்தா தொடங்குவோம்”- சிம்புவை கலாய்த்த வீடியோவுக்கு தயாரிப்பாளர் பதிலடி 

10:43 AM Mar 17, 2020 | santhoshkumar

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதால் எச்சரிக்கை நடவடியாக இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது படக்குழு.

இந்த ஷூட்டிங் ரத்து செய்திருப்பதால் சிம்பு மிகவும் குஷியாக இருப்பார் என்பதுபோல மீம்ஸ்கள், மீம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுகிறது. இதில் ஒரு வீடியோவை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் ‘மாநாடு’ ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT