வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் தொடங்கப்படாமலே இருந்திருக்கிறது. சிம்பு ஷூட்டிங் வருவது குறித்து எந்ததகவலும் படக்குழுவிடம் தெரிவிக்காமல் அவர்களை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் சுரேஷ் காமாட்சி படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்தார்.

Advertisment

simbu

இதனிடையே ஞானவேல்ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து முதல் கட்ட ஷூட்டிங்கில் மட்டும் நடித்துவிட்டு, அதன்பிறகு அந்த ஷூட்டிங்கிற்கு செல்வதையும் தவிர்த்திருக்கிறார். இதன்பின் தயாரிப்பாளர்களை வைத்து சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தற்போது சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் சுமூகமாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சொல்லப்பட்டது.

அதனையடுத்து சிம்பு நாற்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் மாலை போட கோவிலுக்குச் சென்ற புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக்கட்டி கிளம்பியுள்ளார். அப்போது நடத்தப்பட்ட பூஜையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

Advertisment

தற்போது மதியம் போல சிம்பு சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவர் மாநாடு படத்திற்காக பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.