ADVERTISEMENT

போனி கபூருக்கு எதிராக அஜித் பட இயக்குநர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

12:20 PM Apr 29, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

1999-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் 'எஸ்.ஜே சூர்யா'. தொடர்ந்து விஜய்யின் 'குஷி', 'நியூ' போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனிடையே வாலி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் எஸ். எஸ். சக்கரவர்த்தியிடம் இருந்து போனி கபூர் வாங்கியிருந்தார். இதனிடையே எஸ்.ஜே சூர்யா, கதையாசிரியருக்கே படத்தை ரீமேக் செய்ய உரிமை உண்டு. எனவே வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் 'வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போனி கபூருக்கு எந்த தடையும் இல்லை' என இடைக்கால உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது. இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எஸ்.ஜே.சூர்யா.

இந்நிலையில் இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது . அதில் "சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ்.ஜே.சூர்யா கோர முடியும்" என தீர்ப்பளித்து எஸ்.ஜே சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே வாலி படத்தை யார் ரீமேக் செய்ய முடியும் என்பது தெரியும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT