விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் தயாரிக்கிறார்.

Advertisment

sj surya

ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தலயின் 59 வது படமான இதை முடித்துவிட்டு தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு பேட்டியில் தல60 படத்தில் அஜித் அஜித்தாகவே இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரேஸராகவே நடிக்கிறார் என்றொரு தகவல் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாதான் வில்லன் என்று மற்றுமொரு செய்தி பரவி வந்தது. இதற்கு எஸ்.ஜே. சூர்யாவே மறுப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், “தல 60 படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. அஜித் மீதும், போனி கபூர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.