trichy ak61 update poster goes viral social media

Advertisment

'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் படம் குறித்து இதுவரை படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் திருச்சி மாவட்ட அஜித் ரசிகர்கள் ஏகே 61 படத்தின் அப்டேட்டை கேட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார். இதனை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் 1020 நாட்களுக்கு பிறகு விராட் கோலி சதம் அடித்துள்ளார் என்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இதனை குறிப்பிட்டு போஸ்டரில், விகே-வின் சாதனை 1020 நாட்களுக்கு பிறகு இப்போது, ஏகேவின் தரிசனம் 197 நாட்களுக்கு பிறகு எப்போது? என்று போனி கபூரிடம் கேட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் முந்தைய படமான வலிமை படத்திற்கு உள்ளூர் பிரபலம் முதல் உலக பிரபலம் வரை அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அதிரவைத்தது குறிப்பிடத்தக்கது.