ADVERTISEMENT

'இத்தனை கொலைகளா...' ரத்தம் தெறிக்கும் சாணி காயிதம் ட்ரைலர்

01:31 PM Apr 26, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன், இயக்குவது மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'சாணிக்காயிதம்' படத்தில் செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். அப்போது எத்தனை கொலை பண்ணியுள்ளீர்கள் என இருவரிடமும் கேட்க, செல்வராகவன் 24 கொலையும், கீர்த்தி சுரேஷ் 25 கொலையும் என்று கூறுகின்றனர். பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரில் ரத்தம் தெறிக்க தெறிக்க இருவரும் கொலைகள் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=Ri_4HlFQHU4

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT