selvaraghavan saanikaayidham movie tesar goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகஇருக்கும் செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து படத்தின்முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் முன்பேநிறைவடைந்த நிலையில் நீண்ட நாளாகவே ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருந்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் டீஸருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. டீசரில் ஒருத்தன் கல்லால அடிச்சா நாமளும் கல்லால அடிக்கிறோம், ஒருத்தன் எச்சி துப்புனா பதிலுக்கு நாமளும் எச்சி துப்புறோம், ஆனால் ஒருத்தன் நம்ம வாழ்க்கைய அழிச்சா அவன தூக்கி ஜெயில்ல போடணுமா என்று கீர்த்தி சுரேஷ் கூறும் வசனம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் இப்படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Advertisment