ADVERTISEMENT

‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்!

11:42 AM Jan 27, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் அட்லியிடம் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனைப் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா கூறும்போது...

"தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ‘டாக்டர்’ & ‘அயலான்’ 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தைப் பெற்ற படங்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்படங்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை அழைத்து வரும். ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது.

‘டான்’ எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையைக் கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தைப் பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி. அனிருத் அவர்களின் இசை படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பலம். சிவகார்த்திகேயனுடனான அவரது கூட்டணி, இதுவரை பிரமாண்ட வெற்றியினை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆல்பத்தை கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT