/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivaka_0.jpg)
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு டான் படத்தை மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
இதனிடையே இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும்இந்தி ஆகிய மொழிகளில் டான் திரைப்படம் வெளியாகும் அதே நாளானமார்ச் 25 ஆம்தேதி வெளியாகவுள்ளது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் 'டான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கஅதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)